பதிலடி கொடுத்த நடிகை – கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறாரா பிரியாமணி

by Column Editor

தமிழில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி.

சில ஆண்டுகளாக தமிழில் நடிக்காமல் இருக்கும் பிரியாமணி, ஹிந்திபடங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜூவுக்கும், அவரது முதல் மனைவிக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை என சர்ச்சை எழுந்தது.

இதன்காரணமாக, பிரியாமணியைவிட்டு முஸ்தபா ராஜூ பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இதன்பின், தனது கணவர் தன்னை விட்டு பிரியவில்லை என்றும், கண்டிப்பாக தன்னிடம் திரும்பி வருவார் என்றும் தெரிவித்திருந்தார் பிரியாமணி.

இந்நிலையில் இந்த அணைத்து சர்ச்சைக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தீபாவளியையொட்டி கணவர் முஸ்தபாவுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதன்காரணமாக பிரியாமணி கணவரை பிரிந்து விட்டதாக வெளியான வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment