அசத்தல் கெட்டப்பில் சிம்பு… ‘மாநாடு’ முன் வெளியீட்டு விழா

by Column Editor

மாநாடு படத்தின் முன் வெளியீட்டு விழா ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது. மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் . . எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மாநாடு படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படக்குழுவினர் முதலில் தீபாவளியை டார்கெட் செய்தனர். ஆனால் சில காரணங்களால் படம் அப்போது வெளியாகவில்லை. தற்போது நவம்பர் 25-ம் தேதி மாநாடு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் மாநாடு படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் படக்குழுவினர்ம் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். சிம்பு விழாவில் அசத்தல் கெட்டப்பில் வந்துள்ளார்.

மேலும் யுவன், எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, மகத், எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு திரைப்படம் அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் முன் வெளியீட்டு விழாவில் அரசியல் களம் சார்ந்த வண்ணம் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநாடு முன் வெளியீட்டு விழா ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related Posts

Leave a Comment