மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைய போகிறாரா நமீதா மாரிமுத்து

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் புகழ் நமிதா மாரிமுத்துவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது.

ஏனெனில் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் அவ்வளவு பிரபலம் ஆகியிருக்கிறார். ஆனால் எல்லாரும் எதிர்பார்த்தது போல இவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

உள்ளே சென்ற 6-வது நாளிலேயே அறியப்படாத காரணங்களுக்காக வெளியேறினார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் ஒன்றாக நமீதா பிக் பாஸ் 5-ல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வாரா என்ற கேள்விக்கு இதை நீங்கள் பிக் பாஸ்-இடம் தான் கேட்க வேண்டும் என பதில் கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment