விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த சரத்குமார் மற்றும் கன்னட நடிகர்கள்!

by Column Editor

விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் சரத்குமார் மற்றும் இரு கன்னட நடிகர்கள் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
தற்போது இந்தப் படத்தின் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவர் விஜய் ஆண்டனியின் நண்பராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கன்னட நடிகர்கள் இருவரும் படத்தில் இணைந்துள்ளனராம். கன்னட நடிகர் தனஞ்செயன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். மேலும் ‘தியா’ படத்தின் மூலம் பிரபலமான பிருத்வி அம்பார் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியின் நண்பராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment