நடிகையின் பிறந்தநாளில் வெளியான உண்மை – ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

by Column Editor

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரத்திலும், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை அதியாவின் பிறந்தநாளில் உறுதி செய்துள்ளார் கே.எல்.ராகுல். இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரத்திலும், கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை அதியாவின் பிறந்தநாளில் உறுதி செய்துள்ளார் கே.எல்.ராகுல். இன்ஸ்டாகிராமில் இவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்தி பட நடிகையான அதியா ஷெட்டி, பாலிவுட் திரையுலகில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். சுனில் ஷெட்டி தமிழில் கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்தில் அதிரடி வில்லனாக நடித்து கெத்து காட்டி இருந்தார். மேலும் தற்போது மோகன் லால் நடித்து வரும் ‘மரைக்கார்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதியாவுடன், கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு சென்றிருப்பதாக தகவல் பரவியது போது, இதனை மறுத்த சுனில் ஷெட்டி… “தன்னுடைய மகள் இங்கிலாந்து சென்றிருப்பது உண்மை தான். அவர் தன் தம்பி அஹானுடன் சென்றிருக்கிறார். ஹாலிடேவுக்கு சென்றிருக்கிறார்கள். அதியாவும், ராகுலும் ஒரே நிறுவன விளம்பரத்தில் நடித்ததால் அவர்கள் இடையே நல்ல நட்பு உள்ளது. அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் அது விளம்பர நோக்கில் மட்டுமே. மற்றபடி இருவருக்கும் இடையே எதுவும் இல்லை என்பது போல் தெரிவித்திருந்தார்.

அதியா – ராகுல் தங்களது காதலை வெளிப்படுத்தாமல், தொடர்ந்து டேட்டிங் செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், தற்போது அதியா பிறந்தநாளில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, ராகுல் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு, ஹார்ட் எமோஜியுடன் ஹாப்பி பர்த்டே மை அதியா என பதிவிட்டுள்ளார். இவர்களது காதல் கிசுகிசுத்து விவகாரத்தை உறுதி செய்யும் விதமாக இவர் போட்டுள்ள பதிவை கண்டு, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பல பிரபலங்கள், ஆரம்ப காலத்தில் தங்களது காதலை ஊர் உலகத்திற்கு தெரிய கூடாது என மறைப்பதும், பின்னர் காதல் விவகாரம் கை மீறி போனால் உண்மையை ஒப்புக்கொள்வதும் வழக்கமான ஒன்று தான்… இவர்கள் மட்டும் இந்த விவகாரத்தில் விதி விலக்கா? என்ன…

Related Posts

Leave a Comment