கேங்ஸ்டராக மாஸ் காட்டும் விக்ரமின் ‘மகான்’.. டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் !

by Column Editor

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மகான்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவது மகன் துருவ் விக்ரம் முதல்முறையாக நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் பிரொக்ஷன் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் வாணி போஜன், சிம்ரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சின்ஹா, சனந்த் ரெட்டி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் ஓடிடித்தளத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. விக்ரம் கேங்ஸ்டராக மாஸான கலக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று போலீசாக துருவ்வும் கலக்கியுள்ளார். இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment