யாழ்.நகரில் முகக்கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது!

by Column Editor

யாழ் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப் பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்ப்பாண நகரில் தற்பொழுது பண்டிகை காலம் என்பதினால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடியுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்த போது, யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதிகளில் முக கவசம் அணியாது நடமாடிய 25 பேர் கைது செய்யபட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related Posts

Leave a Comment