இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு

by Column Editor

டி20 உலகக்கோப்பையில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்தாலும் இந்திய அணிக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து கிட்டதட்ட தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இரு குழுவிலும் உள்ள ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் பங்கேற்கும். இதில் குறைந்தபட்சம் மூன்று வெற்றிகளை அதிக நெட் ரன் ரேட்டுன் பதிவுசெய்தால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு இருக்கும். இதனால் நாளுக்கு நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்றுள்ளது. இதனால், இந்தியாவின் நெட் ரன் ரேட் -1.0609 என குறைந்துள்ளது. ஆனால் இந்திய அணிக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதுமட்டும் போதுமா என்றால் இல்லை… கிட்டதட்ட தலையை சுற்றி காதை தொடும் கதை தான் இது..!

இந்திய அணி -1.0609, ஆப்கானிஸ்தான் +3.097 என ரன்ரேட் வைத்துள்ளது. எனவே அந்த அணிக்கு எதிரான போட்டியில் கிட்டதட்ட 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதேபோல ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதிராகவும் இந்தியா மெகா வெற்றியை பெற வேண்டும். இதனைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்திக்க வேண்டும்.

இதனால் இந்திய ரசிகர்கள் இந்தியா விளையாடும் போட்டியை தவிர்த்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து விளையாடும் போட்டியை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment