இஸ்ரேலிய தூதரை மாணவர்கள் மிரட்டினார்களா என்பது குறித்து விசாரணை!

by Column Editor

இஸ்ரேலிய தூதரை மாணவர்கள் மிரட்டினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனாமிக்ஸ் (எல்எஸ்இ) பல்கலைக்கழகத்தில் மாணவர் விவாத சமூகத்தால் நடத்தப்பட்ட மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த நிகழ்வில் பேசுவதற்கு Tzipi Hotovely அழைக்கப்பட்டார்.

அவர் நிகழ்வு நிறைவுப்பெற்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது, எதிர்பாளர்களின் கூச்சலிடுவாதால் அவர் விரைந்து செல்லும் கட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்தநிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால், இது தனக்கு சிறந்த மாலை நேரமாக இருந்தது என்றும் தான் அச்சுறுத்தப்படவில்லை எனவும் Tzipi Hotovely தெரிவித்துள்ளார்.

இதனிடையே Tzipi Hotovelyயை நடத்திய விதம் வெறுக்கத்தக்கது என்று உட்துறை செயலாளர் பிரித்தி படேல் கூறினார். அத்துடன் இச்சம்பவத்தை விசாரிப்பதில் பொலிஸாருக்கு முழு ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொண்டதை மெட் பொலிஸ் உறுதிப்படுத்தியது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

Related Posts

Leave a Comment