சென்னையில் முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பு – பிச்சைக்காரன் 2

by Column Editor

விஜய் ஆண்டனி இயக்கி, நடிக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடித்துள்ளது.

இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ படம் மூலம் நடிகராக களமிறங்கினார். பின்னர் 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருந்த இந்தப் படத்தை சசி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் தாய் குணமடைய பிச்சை எடுக்கும் மகனாக விஜய் ஆண்டனி நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் பணிகளை தொடங்கினார் விஜய் ஆண்டனி. முதலில் ’பாரம்’ படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணசாமி பிச்சைக்காரன் படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதற்கிடையே அவர் நீக்கப்பட்டு, ’ஆள்’, ’மெட்ரோ’, விஜய் ஆண்டனியின் ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் விஜய்ஆண்டனி இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதையை எழுதியதோடு இயக்குநராகவும் அறிமுகமாவதாக அறிவித்தார். இந்த பாகத்தையும் அவரின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கலந்துகொண்டு விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். விஜய் ஆண்டனியின் புதிய பரிமாணத்தில் இயக்கத்திலும் உருவாகும் இந்த படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Posts

Leave a Comment