முருங்கை கீரை சாதம்….

by Editor News

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப், துவரம் பருப்பு – கால் கப், முருங்கை கீரை – அரை கப், பெரிய வெங்காயம் – 1, உப்பு – தேவையான அளவு, நெய் – 2 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன், பொட்டுக் கடலை – 2 டீ ஸ்பூன், பச்சரிசி – 2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டீ ஸ்பூன். தாளிக்க : கடுகு- அரை டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீ ஸ்பூன், பூண்டு – 3 பற்கள், எண்ணெய் – 1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1

முருங்கைக் கீரை சாதம் செய்முறை:

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவ வேண்டும். மூன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 2 விசில் வந்ததும் தீயை குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வையுங்கள். பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி கொள்ளுங்கள். வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து, அதனை பொடியாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளியுங்கள்.

பிறகு பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றை சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து ஒன்றாக கலந்து விடுங்கள். இப்போது சுவையான முருங்கை கீரை சாதம் ரெடி. இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருள், முருங்கைக் கீரை. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடவேண்டிய உணவு. இந்த மாதிரி செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுத்துபாருங்க… சாப்பாட்டை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க.

Related Posts

Leave a Comment