தன் நாட்டு மக்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கை!

by Lifestyle Editor

தமது நாட்டு மக்களை உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலிடப்பட்டள்ள 24 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ​​புர்கினா பாசோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், ஹைட்டி, ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், லிபியா, மாலி மற்றும் நைஜர் உள்ளிட்ட நாடுகளும், வட கொரியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், ரஷ்யா, சோமாலியா, சோமாலிலாந்து, தெற்கு சூடான், சூடான், சிரியா, உக்ரைன், வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கே பயணிக்க வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த எச்சரிக்கையை மீறி பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களின் பயண காப்பீடு செல்லுபடியாகாமல் போக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிர்வாகத்தின் இந்த பயணத்தடையால், சுற்றுலா பயணிகள் உட்பட பிரித்தானிய மக்களுக்கும் குறிப்பிட்ட 24 நாடுகளுக்குச் செல்லஅனுமதிக்கப்போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிக அவசரப் பயணங்கள் மட்டுமே குறித்த நாடுகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், அந்த நாட்டுக்கு பிரித்தானிய மக்கள் பயணிப்பது ஆபத்தில் முடியலாம் எனவும், பிரித்தானிய மக்கள் கைது செய்யப்படும் நெருக்கடியான சூழல் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடரும் நிலையில், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment