குறைந்த தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கம் முதல் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6,610 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து ரூபாய் 52 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கும், 1 கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே. 8) சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040 விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630 விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment