குறைந்தது தங்கம் விலை…

by Lifestyle Editor

கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சற்று சரிவை கண்டுள்ளது.

நேற்று (மே 3) தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,600-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.52,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.5,406-க்கும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ஒரு சவரன் ரூ.43,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும், ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment