குடும்ப வன்முறைகளை தீர்ப்பதற்கான புதிய சட்டம் – கீதா குமாரசிங்க

by Lifestyle Editor

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் 7ஆம் திகதி வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் கடந்த மாதம் 20 ஆம் திகதி சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலையும் நடத்தியிருந்தது.

ஜனாதிபதி அலுவலகம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வல்லுணர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment