மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

by Lifestyle Editor

ஐ.பி.எல் தொடரின் மும்பை அணி ராஜஸ்தான் அணி6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை இழந்தும் மத்தியில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதேவேளை மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment