டெல்லியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ராஜஸ்தான்!

by Lifestyle Editor

17ஆவது IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற Rajastan Royals மற்றும் Delhi Capitals அணிகளுக்கு இடையிலான போட்டியில் Rajastan Royals அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Delhi Capitals அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துப்பெடுத்தாடிய Rajastan Royals அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.

அதையடுத்து, 186 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய Delhi Capitals அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

Related Posts

Leave a Comment