அரைத்து வைத்த செட்டிநாடு மீன் வறுவல்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

செட்டிநாடு மசாலா அரைக்க தேவையானவை :

சிறிய வெங்காயம் – 10

பூண்டு – 4 பல்

வரமிளகாய் – 12

கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கிராம்பு – 10

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

மற்ற பொருட்கள் :

மீன் துண்டுகள் – 6

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் கொத்தமல்லி விதை, சீரகம், கருப்பு மிளகு, கிராம்பு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் இருந்து கடாயை இறக்கி அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு கொள்ளுங்கள்.

பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடிதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அதே மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து இந்த விழுதுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மீன் மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தற்போது கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளில் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிசைந்து மீனை நன்கு ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த மீனை எடுத்து அரைத்த மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி கல்லில் போட்டுக்கொள்ளவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் மீன் நன்றாக வேகும் வரை நன்கு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான் சுவையான அரைத்து வைத்த செட்டிநாடு மீன் வறுவல் ரெடி…

Related Posts

Leave a Comment