பாசிப்பருப்பு தோசை…!

by Lifestyle Editor

பாசிப்பருப்பு தோசைக்கு தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/4 கப்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
பெருங்காயம் – 1 சிட்டிகை

பாசிப்பருப்பு தோசை செய்யும் முறை:

முதலில் அரிசியையும் பருப்பை நன்றாக கழுவி எடுத்து அதை 2 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் வெங்காயத்தைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஊறவைத்த அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவை சேர்த்து அரையுங்கள். பதமாக நீங்கள் அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் ஆகியவை சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தயார் செய்த மாவை தோசையாக ஊற்றிவிடுங்கள். தோசையை சுற்றி கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடுங்கள். நன்கு வேகவிடுங்கள். மணக்க! மணக்க! பாசிப்பருப்பு தோசை ரெடி. கூடவே தொட்டுக்க கொஞ்சம் புதினா துவையல், தக்காளி சட்னி வைத்தால், அதன் சுவை சூப்பராக இருக்கும். தேங்காய் சட்னிக்கு ‘நோ’.

Related Posts

Leave a Comment