அளவுக்கு அதிகமான செக்ஸ்..ஆண்களுக்கு உண்டாக்கும் பாதிப்புகள்..

by Lifestyle Editor

எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு இப்போது வரை சரியான எண்ணிக்கை கிடையாது. இருப்பினும் அளவுக்கு அதிகமாக போனால் பாதிப்புகள் வரும் என்பது உறுதி. எனவே உங்களுக்கே ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவது நல்லது. அந்தவகையில் ஆண்கள் அளவுக்கு அதிகமாக செக்ஸில் ஈடுபட்டால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.

ஆண்கள் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன ஆகும்..? பொதுவாக உடலுறவின் போது ஆண்கள்தான் அதிகமாக ஆக்டிவாக இருப்பார்கள். அவர்களுக்கான வேலை என்பதுதான் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். தசைகள் வலுவிழந்து உடலின் ஆற்றல் குறைந்துவிடும்.

அடுத்தடுத்து ஓய்வே இல்லாமல் அளவுக்கு அதிகமாக ஈடுபடும்போது உடல் சோர்வு, ஆற்றல் இழப்பு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு இப்படியே செய்துகொண்டிருந்தால் இதய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சனை, ஆண்குறி விறைப்பதில் பிரச்சனை, சீக்கிரமே விந்து வெளியேறுதல், புரோஸ்டேட் புற்றுநோய் என பல வகையான நோய்கள் வரலாம்.

அதுமட்டுமன்றி நீங்கள் இடைவெளியின்றி உடலுறவில் ஈடுபடுவதால் உங்களுடைய செக்ஸ் செயல்பாடுகள் குறைந்துவிடும். உங்களுக்கு ஒரு கட்டத்தில் திருப்தி கிடைக்காமல் போகும். இதனால் உங்கள் துணையை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடும். உங்களை திருப்திபடுத்தாத துணை மீது வெறுப்பு உண்டாகலாம். இதனால் உங்கள் துணைக்கும் செக்ஸ் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டாகலாம். இதனால் நீங்கள் மட்டுமே செக்ஸ் உணர்வை அனுபவிப்பவராக இருப்பீர்கள். ஒருகட்டத்தில் நீங்கள் செக்ஸ் திருப்திக்காக மற்றொரு துணையை தேடலாம். இது உங்களுக்கு பாலியல் நோய்களை உருவாக்கலாம்.

பாதுகாப்பான செக்ஸின் வரையறை என்ன..?

பாதுகாப்பான செக்ஸ் என்பது எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. உடலளவில் மட்டுமன்றி கணவன் – மனைவி உறவிலும் பிடிப்பு அதிகரிக்கிறது. எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் இது வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை பொருத்து மாறுவதால் இதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. இருப்பினும் தோராயமாக வயதுக்கு ஏற்ப அளவீடுகள் உள்ளன.

20-25 வயது : ஒரு வாரத்திற்கு 3 முறை உடலுறவு கொள்வது சிறந்தது. 30-50 வயது எனில் ஒரு வாரத்தில் 2 முறை உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 50 வயது எனில் வாரத்தில் ஒரு முறை வைத்துக்கொள்வது நல்லது.

சிலருக்கு வயது மற்றும் உடல் ஆரோக்கியம் கருதி செக்ஸ் வைத்துக்கொள்வதே ஆபத்தாக முடியும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் , மாரடைப்பு வந்தவர்கள். சிகிச்சையில் இருப்போர், அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாலியல் தொற்று உள்ளவர்கள் அல்லது வேறு ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள் அதிகமாக உடலுறவு கொள்வதையோ அல்லது முற்றிலுமாக உடலுறவு கொள்வதையோ தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Related Posts

Leave a Comment