ஆண்மை குறைபாடு : விறைப்புத்தன்மை குறைபாடுக்கு அற்புத மூலிகைகள்!

by Lifestyle Editor

விறைப்புத்தன்மை என்பது உறுதியான ஆண்குறியை சரியாக பராமரிக்காத காரணத்தால் உடலுறவு கொள்ள முடியாத நிலையாகும். ஆண்களில் பலரும் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வாகும் மூலிகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

விறைப்புத்தன்மை எந்த வயதிலும் ஆண்களை பாதிக்கலாம். ஆனால் அமெரிக்கன் குடும்ப நல மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி விறைப்புத்தன்மை குறைபாடு ஒரு ஆணுக்கு 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பொதுவானது என்கிறது.

மருத்துவ சிகிச்சைகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த விறைப்புத்தன்மையை குறைக்க மருந்துகளை பரிந்துரைக்கின்றன. எனினும் சில ஆண்கள் இதற்கு மாற்றாக மூலிகை சப்ளிமெண்ட் எடுக்க விரும்புகிறார்கள்.

பல மூலிகைகள் ஆண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் திறம்பட செயல்படும் திறனை கொண்டுள்ளன. அதே நேரம் இவை விறைப்பு பிரச்சனைக்கு உதவும் என்று சொல்லகூடிய ஆய்வுகள் குறித்து ஆதரிக்க சிறிய அளவு சான்றுகள் உள்ளன. அதனால் எந்த மூலிகையை எப்படி சேர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

​விறைப்புத்தன்மை – டீ ஹைட்ரொபியாண்ட்ரோஸ்டெரோன்(DHEA):

இது உடலில் இயற்கையான ஸ்டீராய்டு ஹார்மோன் பிரதிபலிக்கும் ஒரு சப்ளிமெண்ட் ஆகும். இது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை சிகிச்சைக்கு உதவும்.

இந்த சப்ளிமெண்ட்கள் இயற்கையான ஸ்டீராய்டு ஹார்மோனின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது. இதன் அளவு நபருக்கு நபர் மாறுபடலாம். சில ஆண்கள் சுமார் 6 மாதங்களுக்கு 20 முதல் 75 மில்லிகிராம் வரை எடுக்கிறார்கள். மற்றவர்கள் 8 வாரங்கள் வரை 100 முதல் 400 மில்லிகிராம் வரை எடுக்கலாம்.

இது எப்படி வேலை செய்கிறது

ஒரு நபருக்கு வயதாகும் போது இயற்கையான ( DHEA) அளவு குறையும். அட்ரீனல் ஹார்மோனின் அளவை அதிகரிப்பது உடலானது பாலியல் செயல்பாடுகள் மேம்படுத்தும் ஹார்மோன்கள் உருவாக்க உதவுகிறது.

ஆராய்ச்சி -1999 ஆம் ஆண்டு யூரோலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் ( DHEA) சிகிச்சையானது பாலியல் செயல்திறனை மேம்படுத்தியதை காட்டியது. இருப்பினும் ஆய்வு சிறியதாக உள்ளது. பிற ஆராய்ச்சிகள் சீரற்ற முடிவுகளை காட்டியுள்ளன. 2012 ஆம் ஆண்டு ஓர் அறிக்கை ஒன்று ( DHEA) விறைப்புத்தன்மைக்கு உதவாது என்று பரிந்துரைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பக்கவிளைவுகள்

குறைந்த அளவுகளில் எடுக்கும் போது ( DHEA) பொதுவானது. பாதுகாப்பானது. முகப்பரு பக்கவிளைவுகளாக இருக்கலாம்.

​எபிமிடியம் – Horny goat weed (epimedium):

சீன மூலிகையான இது விறைப்புத்தன்மை உட்பட பாலியல் செயலிழப்புடன் தொடர்புடைய காரணங்களை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. வலி மிகுந்த உடலுறவு மற்றும் பாலியல் ஆர்வமின்மை கொண்டிருக்கும் பெண்கள் இதை எடுக்கலாம்.

எப்படி வேலை செய்கிறது

இது செயல்படும் சரியான வழிமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாது.ஆனால் உடலில் இருக்கும் ஹார்மோன்களின் அளவை இது மாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது பாலியல் செயல்திறனை மேம்படுத்தலாம்.

ஆராய்ச்சி

இது குறித்து ஆய்வு செய்யப்படவில்லை எனினும் தி ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசனில் வெளியிடப்பட்ட நம்பகமான ஆய்வு வெளியிட்ட அறிவிப்பில் எபிமிடியம் சுத்திகரிக்கப்பட்ட சாற்றை எலிகள் மீது ஆய்வு செய்தது. சாற்றை பெற்ற எலிகள் பெறாத எலிகளை விட அதிக இரத்த ஓட்டம் இருப்பதை கண்டறிந்தது.

பக்கவிளைவுகள்

இந்த மூலிகையை பயன்படுத்துவது ஒருவரது இதய செயல்பாட்டை பாதிக்கலாம். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எடுக்க கூடாது. இது சீரற்ற இதயத்துடிப்பை உண்டாக்கும். மருந்து மற்ற மருந்துகளுடனும் தொடர்பு கொள்ளலாம்.

விறைப்புத்தன்மை பிரச்சனை -எப்போது மருத்துவர் :

விறைப்புத்தன்மை பிரச்சனையை மருத்துவரிடம் ஆலோசிக்க தயங்க வேண்டாம். பல மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆலோசனைகள் கூட இந்த பிரச்சனையை குறைக்க உதவும்.

பாலியல் ஆர்வத்தில் மாற்றங்கள், புதிய மருந்தை உட்கொண்வ பிறகும் விறைப்புத்தன்மை செயல்பாட்டில் மாற்றங்கள் அல்லது பாலியல் செயல்பாட்டில் பிற மாற்றங்கள் அனுபவித்திருந்தால் விறைப்புத்தன்மை குறித்து மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் இது மருத்துவ தன்மையை வேண்டிய அறிகுறியாக இருக்கலாம். அதற்கு சாத்தியமான காரணங்களாக சொல்லப்படுவது..

கவலை

பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சி

நாள்பட்ட சிறுநீரக நோய்

மன அழுத்தம்

சர்க்கரை நோய்

இதயம் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான நிலைமைகல்

ஆண்குறி அல்லது சுற்றியுள்ள உறுப்புகளுக்கு ஏற்பட்ட காயத்தின் வரலாறு

ஆண்டிடிரஸண்ட்ஸ்

பசி அடக்கி போன்ற மருந்து எடுப்பது

விறைப்புத்தன்மை அடைவதற்கும் அதை பராமரிப்பதற்கும் பல விஷயங்கள் நடக்க வேண்டும். உணர்வு தூண்டுதல் அதிகரித்த இரத்த ஓட்டம், ஆண்குறியில் இரத்த அழுத்தம் அதிகரிப்பு மற்றும் ஆண்குறியின் தசைகள் சுருங்குதல் ஆகியவை அடங்கும். இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை தடைபடும் போது விறைப்புத்தன்மை உண்டாகலாம்.

Related Posts

Leave a Comment