இன்றைய ராசி பலன் – மார்ச் 27, 2024

by Lifestyle Editor

மேஷம்:

உங்கள் காதல் உறவு குறித்து பாதுகாப்பற்ற சூழலை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணை கூறுவதை மனம் திறந்து கேட்டு சரியான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களுக்கு பொருளாதார லாபம் கிடைக்கின்ற புதிய சூழல் உருவாகும். பணி நெருக்கடிகளுக்கு இடையே ஓய்வு தேவை.

ரிஷபம்:

உங்கள் மனம் சொல்லும் விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் காதல் உறவில் மன்னிப்பு மற்றும் கருணை உள்ளம் கொண்டிருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வெற்றி அடைவீர்கள். செலவுகளை செய்யும் போதும், முதலீடுகளை செய்யும்போதும் கவனம் தேவை.

மிதுனம்:

யாரோ சிலரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சிறப்பான விஷயங்களை யதார்த்தமான விஷயங்களின் மீது கவனம் செலுத்துவீர்கள். அண்மையில் சந்தித்த நபருடன் ஆழமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள தவறி இருப்பீர்கள். குறுகிய கால முதலீடுகளை தவிர்க்கவும். ஆவணங்களில் கவனம் தேவை. வெற்றி உங்களை தேடி வருகிறது.

கடகம்:

உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. உங்கள் உறவுகளில் கருணை மிக அவசியம். உங்களுக்கான பாராட்டு வந்து சேரும். தோராயமான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். சாதுரியமாக சிந்தித்து செயல்படவும். பயணங்கள் தள்ளி போகும். அது தொடர்பாக அமைதி காக்கவும்.

சிம்மம்:

உங்கள் உறவுகளில் உளப்பூர்வமான பந்தம் நிரம்பி இருக்கும். உங்கள் எண்ணங்களுடன் ஒத்து போகும் ஒரு நபரை நீங்கள் சந்திப்பீர்கள். உங்களுக்கு பொருளாதார பாதுகாப்பு சுழல் மேம்படும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். பயணங்கள் உங்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.

கன்னி:

உங்கள் காதல் உறவுகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டும். அது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தலாம். ஏற்கனவே ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை கவனியுங்கள். கூடுதலாக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். பயணங்கள் செய்ய வாய்ப்பு உண்டு.

துலாம்:

உங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் ஆள் மனம் சொல்வதைக் கேட்டு நடப்பீர்கள். உங்கள் பணி சார்ந்து நீங்கள் தடைகள் அல்லது சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் அவற்றை எதிர்கொள்வதற்கான தைரியம் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிகம்:

புதிய காதல் அனுபவங்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பந்தம் பலப்படும். உங்கள் எண்ணங்கள் பலமானதாக இருக்கும். உங்கள் பணி வாழ்க்கை சார்ந்து வெற்றி அடைவீர்கள். உங்கள் இலக்குகளின் மீது கவனம் செலுத்துங்கள். பணிச்சுமைகளுக்கு இடையே ஓய்வு தேவை.

தனுசு:

உங்கள் காதல் உறவில் உள்ள கசப்பான அனுபவங்களை நீங்கள் மறக்க வேண்டும். உங்கள் அன்புக்குரிய நபர்களுடனான பந்தத்தை மேம்படுத்த வேண்டும். உங்கள் இலக்கு குறித்த தெளிவு இருக்க வேண்டும் மற்றும் உலகில் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை இருந்தால் வெற்றி தேடி வரும்.

மகரம்:

புதிய காதல் பந்தத்தில் நீங்கள் நுழைய இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உரையாட வேண்டும். உங்கள் பணி சார்ந்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் ஆழ்மனம் சொல்லும் விஷயங்கள் மீது நம்பிக்கை வைக்கவும். தினசரி உடற்பயிற்சி தேவை.

கும்பம்:

உங்கள் உறவுகள் சார்ந்து வளர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்படும். உங்களுக்கான பந்தம் மேம்படும். உங்களுடைய புத்தாக்க சிந்தனைக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் தெளிவான திசை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்கள். உங்களைப் பற்றி நேர்மறையான பிம்பத்தை கட்டமைப்பீர்கள்.

மீனம்:

உங்கள் உறவு சார்ந்து வளர்ச்சி மற்றும் மாற்றம் ஏற்படும். உங்கள் பணி வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்பட இருக்கிறது. உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். பழைய பழக்கங்களை கைவிட்டு புதிய அணுகுமுறையை கையாளவும்.

Related Posts

Leave a Comment