சேப்பாக்கத்தில் புதிய சாதனை படைத்த கிங் கோலி…

by Lifestyle Editor

நடப்பு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் கோலி ஆறு ரன்கள் எடுத்த போது டி-20 கிரிக்கெடில் 12000 ரன்களை கடந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

கிறிஸ் கெய்ல், சோயிப் மாலிக், பொல்லார்டு, அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஏற்கனவே இந்த மைல் கல் சாதனையை எட்டியுள்ளனர். இந்த பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த படியாக இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 11156 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், சென்னை அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற மற்றொரு சாதனையை விராட் கோலி படைத்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி 32 போட்டிகளில் ஆயிரத்து ஆறு ரன்கள் எடுத்துள்ளார். சென்னை அணிக்கு எதிராக டேவிட் வார்னர் ஆயிரத்து 105 ரன்கள் எடுத்தததே இந்த அணிக்கு எதிராக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

Related Posts

Leave a Comment