5வது டெஸ்ட்- இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

by Lifestyle Editor

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே நடைபெற்ற 4 ஆட்டங்கள் நிறை பெற்ற நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான 5 வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

259 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2 வது இன்னிங்ஸிக்ல் 195 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி.

எனவே இன்னிங்ஸ் மட்டும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், தொடர் வெற்றியாலும் 4 வது டெஸ்ட் வெற்றியாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் அஸ்திரேலியாவின் முதலிடம் கனவு தகர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment