பொடி அரைக்க தேவையானவை :

பூண்டு – 8

காய்ந்த சிகப்பு மிளகாய் – 1

மிளகு – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 1/882 டீஸ்பூன்

வெந்தயம் – 10 வித்தைகள்

மற்ற பொருட்கள் :

பழுத்த தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

புளி – நெல்லிக்காய் அளவு

காய்ந்த சிகப்பு மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

பெருங்காய பொதி – சிறிதளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பொடி அரைக்க எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிகப்பு மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் தோலுரிக்காத பூண்டு சேர்த்து ஒருமுறை பல்ஸில் வைத்து அரைக்கவும்.

பின்னர் புளியை நன்றாக ஊறவைத்து கரைத்து புளி தண்ணீரை எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த புளி கரைசலுடன் நறுக்கிய தக்காளி, கிள்ளிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கைகளால் மசித்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் காய்ந்த சிகப்பு மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பின் தீயை குறைத்து அதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொடி, நான்காக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கருக விடாமல் ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி அதனுடன் சிறிதளவு பெருங்காய பொடி சேர்த்து ஒரே ஒருமுறை மட்டும் கலந்து விட்டு குறைவான தீயில் கொதிக்கவிடவும்.

ரசம் கொதிவந்தவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்த ரசத்தில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவினால் மணக்க மணக்க சுவையான ரசம் ரெடி….

Related Posts

Leave a Comment