செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் பழங்கள்..

by Lifestyle Editor

ஆப்பிள் :

தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவமணையே செல்ல வேண்டாம் என்று கூறுவதை நாமும் கேட்டிருப்போம். ஆமாங்க, ஆப்பிள் பழம் உங்கள் பாலியல் உறவிலும் உதவுகிறது. ஆப்பிள் பழத்தில் குர்செடின் என்ற ஒரு வகையான ஃப்ளாவோனாய்டு உள்ளது. விறைப்புத்தன்மை அதிகரிக்கவும், ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இது உதவுகிறது. அதிகமான ஆப்பிள் பழம் சாப்பிடுபவர்களிடத்தில் மற்றவர்களை காட்டிலும் விறைப்புத்தன்மை குறைபாடு 14 சதவிகிதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தர்பூசணி :

தர்பூசணி பழத்தில் L-citrulline அதிகமாக உள்ளது. இது நம் உடலுக்குள் சென்றதும் L-arginine-யாக மாற்றமடைகிறது. விறைப்புத்தன்மை அதிகரிக்க L-arginine உதவுவதாக கூறப்படுகிறது. இந்தக் கலவை உடலில் நைட்ரிக் ஆசிடின் உற்பத்தியை தூண்டி ஆணுறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

வாழைப்பழம் :

பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழம் நம்முடைய ரத்த அழுத்தத்தை குறைத்து பாலியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் சில குறிப்பிட பகுதிகளுக்கு ரத்த ஓடம் முறையாக செல்கிறது.

மாதுளை :

மாதுளை பழச்சாறில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் நமது ரத்த ஒட்டத்தை அதிகபடுத்தி விறைப்புத்தன்மை குறைபாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் விலங்குகளிடம் நடத்தபட்ட ஆய்வில் நீண்ட கால விறைப்புத்தன்மை குறைபாட்டை குணப்படுத்தும் தன்மை மாதுளை பழத்திற்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

அவகோடா :

வைட்டமின் மற்றும் ஒற்றை நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமுள்ள அவகோடா பழம் சாப்பிடுவதால் ஆணுறுப்பு உள்பட நம் ஒட்டுமொத்த உடலிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களின் பாலியல் உணர்வையும் தூண்டுகிறது.

Related Posts

Leave a Comment