ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் நீக்கம்? – இளம் வீரருக்கு வாய்ப்பு!

by Lifestyle Editor

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இடையே நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களான ரஜத் படிதார், சர்பராஸ் கான் போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் ரஜத் படிதார் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவிலை. அவர் மொத்தமே இந்த சீரிஸில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் கழட்டிவிடப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் அணிக்குள் அழைக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரிலும், சமீபத்தில் நடந்து வந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Related Posts

Leave a Comment