48
சென்னையில் கடந்த 22ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது. கடந்த 23 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,795க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 24ஆம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ. 46,560க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,820க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவனுக்கு ₹40 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 46,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ₹5815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.