இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..

by Lifestyle Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 77.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Related Posts

Leave a Comment