கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… டேவிட் வார்னர் அறிவிப்பு

by Lifestyle Editor

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இப்போது அவர் டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்கும் நிலையில் அதோடு ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை இப்போது உறுதி படுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக பேசியுள்ள வார்னர் “அடுத்த ஆறு மாதங்கள் சிறந்த பயணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜூன் மாதம் நடக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரைதான் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment