பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்..

by Editor News

பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமான காரியங்களை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிலும், பெண்கள் கர்ப்ப கால தொடக்கத்தில் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் பெண்கள் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் சாப்பிடக்கூடாது உணவுகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி பழம்

பப்பாளி பழம் ஒரு அற்புதமான பழம் என்றாலும் கூட இதில் கர்ப்பப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும் ஈஸ்ட்ரோஜின் அதிக அளவில் உள்ளது. அதன் காரணமாக கரு சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், முதல் 3 மாதங்களில் மறந்தும் கூட பப்பாளியை சாப்பிடக்கூடாது.

அன்னாசிப்பழம்

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழம் என்றால் அது அன்னாசி தான். ஏனென்றால் இதில் காணப்படும் புரோமிலைன் என்சைம் கர்ப்பையை சுருங்கச் செய்யும். இதனால் கருசுதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், இந்த பழத்தையும் தவிர்க்க வேண்டும்.

பலாப்பழம்

பெண்கள் கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு காரணம் பலாப்பழம் உடல் அதிகரிக்க செய்கிறது. இதனால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், பலாப்பழம் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Posts

Leave a Comment