முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையாக மாற.. வீட்டு வைத்தியம்

by Lifestyle Editor

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அந்தவகையில் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முகச்சுரும் நீங்க…

சிறிதளவு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மென்மையான பதத்தில் பேஸ்ட்டை தயார் செய்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் உடனடியாக பொழிவு பெறும்.

வெண்ணெய் மற்றும் தேனில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்,சருமத்தை மென்மையாக்கும் திறன், நிறைந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முகச்சுருக்கங்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இரண்டு டீஸ்பூன் அஸ்வகந்தா தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகச்சுருக்கம் விரைவில் குறைய ஆரம்பிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேக் தயாரித்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தை குறைக்கிறது. இது இயற்கையாகவே சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டக்கூடியது. என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து பின்னர் கழுத்து மற்றும் முகத்தில் தடவி நன்றாக உலரவிட்டு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் புத்துணர்வு பெறும்.

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. இதனால் முசச்சுருக்கம் நாளடைவில் முற்றாக இல்லாமல் போவதுடன் சருமம் என்றும் இளமையுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Related Posts

Leave a Comment