பூர்ணிமாவுடன் காதல்? பிரதீப்-க்கு ரெட் கார்டு- மனம் திறந்த பிக்பாஸ் புகழ் நடிகர்

by Lifestyle Editor

பெண்களின் பேச்சை கேட்டு நான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து விட்டேன், அது முற்றிலும் தவறு என பேட்டியளித்துள்ளார் விஷ்ணு.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் இறுதி வரை வந்த நடிகர் விஷ்ணு, முதன்முறையாக பேட்டியொன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், “நான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தற்கான காரணம், அங்கிருந்த பெண்கள் பிரதீப் மீதான குற்றச்சாட்டை 70 கேமராக்கள் முன்னால் சொன்னார்கள்.

அது மட்டுமல்ல, வார இறுதியில் வந்த கமல் சாரிடமும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் முன்வைத்த கருத்துக்களில் பல பர்சனலான கருத்துக்கள் இருந்தன, ஆனால் அவர்கள் கூறியது பற்றி எந்த உண்மையும் எனக்கு தெரியாது.

அவர்களை கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து அவர்களுடன் பேசுகிறார்கள். அங்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது.

இறுதியில் கன்ஃபஷன் ரூமிற்கு என்னை அழைத்தார்கள், நான் உள்ளே சென்ற வேளையில் அங்கே ஒரு ரெட் கார்ட் இருந்தது. என்னிடம் எதுவும் கேடகவில்லை, உங்கள் முடிவை மட்டும் செல்லுங்கள் என கூறினார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள். பூர்ணிமாவும் அந்த விஷயம் தொடர்பாக என்னிடம் ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார். அதனால்தான் நான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்தேன்.

என்னால் அந்த சூழ்நிலையில் வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை, நான் அங்கிருக்கும் பெண்களை நம்பினேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, இது எல்லாம் பிரதீப்பை டார்கெட் செய்து வெளியே அனுப்ப உருவாக்கப்பட்ட உத்தி என்று

என்னை பொறுத்தவரை பிரதீப்பை வெளியே அனுப்பி இருக்க கூடாது. அது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் வெளியே வந்து பிரதீப்பிடம் பேசும் போது அவரும் சில விஷயங்கள் தொடர்பாக எனக்கு விளக்கங்கள் கொடுத்தார்.

பூர்ணிமாவிற்கும் எனக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. ஆனால் அவர் நடந்து கொள்வதை பார்த்து நானே அவரிடம் நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டேன்.

அதற்கு அவர் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை, நான் அவரை நம்பினேன், ஆனால் யாரும் உண்மையானவர்கள் இல்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வந்தவுடன் தான் தெரிந்தது அவர் கேமராவுக்காக என்னை பயன்படுத்தியுள்ளார் என்று.

அந்த வகையில் அவர் எனக்கு பிக் பாஸ் வீட்டில் நேர்மையாக இல்லை என்பதை நான் நம்புகிறேன்” என வெளிப்படையாக விஷ்ணு பேட்டியில் கூறினார்.

Related Posts

Leave a Comment