செம்பருத்திப் பூவால் உங்கள் முகத்தை பிரகாசமாக்க சிம்பிள் டிப்ஸ்..

by Lifestyle Editor

பொதுவாகவே, செம்பருத்தி பூ மற்றும் இலைகளை தலையில் தடவினால் முடி பிரச்சனைகள் குறையும். ஆனால் செம்பருத்தி பூவால் சருமத்தின் அழகையும் அதிகரிக்கலாம்.

செம்பருத்தி பூக்கள் வெயிலில் காய வைத்து அதை பொடியாக்கி, அவற்றுடன் தக்காளி சாறு கலந்து கால்கள், கைகள், கழுத்து மற்றும் முகத்தில் நன்கு தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால்.. முகம் பொலிவாக இருக்கும்.

செம்பருத்தி பூவை அரைத்து, அவற்றுடன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தைக் கழுவினால் முகம் கண்ணாடி போல பிரகாசமாக இருக்கும்.

அதுபோல், செம்பருத்தி இலைகளை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, அவற்றுடன் முல்தானி மெட்டி மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் அழகாக பளபளக்கும்.

செம்பருத்திப் பூக்களைக் கொண்டும் ஸ்க்ரப் செய்யலாம் தெரியுமா? எப்படியெனில், செம்பருத்திப் பூவின் பொடியுடன் சிறிது சர்க்கரை, கடலைமாவு, பால் சேர்த்து முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்யவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள டான் எல்லாம் போய்விடும். முகம் தெளிவாக இருக்கும்.

Related Posts

Leave a Comment