உயர்ந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதன் கிழமை தங்கம் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையானது. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ. 46,760-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 25 உயர்ந்து ரூ. 5,845-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment