டிக்கெட் டூ பினாலே வின்னர் நிக்சனா? இறுதிடாஸ்கில் நடந்த மிகப்பெரிய டுவிஸ்ட்..

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலேவில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்த போட்டியாளர் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி டிக்கெட் டூ பினாலே முதல் டாஸ்க்கில் விஷ்ணு வெற்றிபெற்று மூன்று புள்ளிகளை கைப்பற்றினார். அந்த டாஸ்க்கில் மணி இரண்டாம் இடமும், மாயா மூன்றாம் இடமும் பிடித்தனர். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டாஸ்க்கில் நிக்சன் வெற்றிபெற்றார். அந்த டாஸ்க்கில் மாயாவுக்கு இரண்டாம் இடமும் பூர்ணிமாவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரண்டு டாஸ்க்குகள் நடைபெற்றது. அதில் கில் ஆர் ஸ்டே என்கிற டாஸ்க்கில் விசித்ராவுக்கு முதலிடமும், ரவீனாவுக்கு இரண்டாம் இடமும் கிடைத்தது, அந்த டாஸ்க்கில் விஷ்ணு மூன்றாம் இடம் பிடித்தார். இதையடுத்து நடைபெற்ற பல்பு டாஸ்க்கில் விஷ்ணு வெற்றிபெற்று மூன்று புள்ளிகளை கைப்பற்றி முதலிடம் பிடித்தார். பூர்ணிமா மற்றும் தினேஷுக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை தீர்மானிக்கும் டாஸ்க் இன்று நடத்தப்பட்டது. அதில் வீட்டின் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள போர்டில் டிக்கெட் டூ பினாலே என்கிற பதாகையை போட்டியாளர்கள் கீழே விழாமல் ஒற்றைக்கையால் பிடித்துக்கொள்ள வேண்டும். யார் அதிக நேரம் கையை எடுக்காமல் பதாகையை பிடித்திருக்கிறார்களோ அவரே இந்த டாஸ்க்கில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

மேலும் இந்த டாஸ்க்கில் வெற்றிபெறுபவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து தொடங்கிய போட்டியில் நிக்சன் முதல் ஆளாக வெளியேறியதால் அவர் டிக்கெட் டூ பினாலே செல்லும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இந்த போட்டியில் ரவீனா வெற்றிபெற்று உள்ளார். அவருக்கு ஐந்துபுள்ளிகள் கிடைத்தாலும் அவருக்கு டிக்கெட் டூ பினாலே டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த விஷ்ணு தான் மற்ற டாஸ்க்குகளின் முடிவில் அடிப்படையில் வெற்றிபெற்று டிக்கெட் டூ பினாலே வின்னராக அறிவிக்கப்பட்டு முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார். இதுவரை டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்ற யாரும் டைட்டில் ஜெயித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment