இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா?

by Lifestyle Editor

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் அதிகளவிலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. படிப்பு விஷயத்தில் ஜோவிகா – விசித்ரா இடையே நடந்த மோதல் முதல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வரை எக்கச்சக்கமான சம்பவங்கள் நடந்துள்ளன.

இப்படி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக விளங்கி வரும் இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதனால் போட்டியாளர்களின் உறவினர்கள் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இந்த வாரம் முழுக்க செம்ம ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.

இப்படி டாஸ்க் ஜாலியாக இருந்தாலும் இந்த வாரம் எவிக்‌ஷனும் நிச்சயம் இருக்கிறது. அதன்படி இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு நாமினேஷல் லிஸ்ட் இருந்ததில்லை.

இந்த முறை வெறும் 3 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் தான் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.

இவர்களில் ஒருவர் தான் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆக உள்ளார். இந்த நிலையில், மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று விசித்ரா முதலிடத்தில் உள்ளார்.

Related Posts

Leave a Comment