‘1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவில் பெருகும்’

by Editor News

இந்தியாவில் வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பொருளாதாரம் பெருகும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். CNBC TV 18 மற்றும் Money Control இணைந்து நடத்திய சர்வதேச AI செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை இளம் தொழில்நுட்ப வல்லுனர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சி.என்.பி.சி – டிவி 18 மற்றும் Money Control இணைந்து நடத்தும் AI செயற்கை நுண்ணறிவு சர்வதேச கருத்தரங்கம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்துறை வல்லுனர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று ஏராளமான துறைகளில் வேலைகளை எளிமைப்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பதைப் போன்று, வேலைவாய்ப்பின்மை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அச்சம் எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக உலகம் முழுவதும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்பது குறித்து தகவல்கள் பெறப்பட்டு, அவை செயல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட துறைகளில் மட்டும்தான் இல்லாமல் பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்தப்போதும் தொழில் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு மாறவுள்ளது.

இந்நிலையில் CNBC TV 18 மற்றும் Money Control இணைந்து நடத்தும் மாநாட்டில் பங்கேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது-

இணைய தள சைபர் குற்றங்கள் மிகுந்த சவாலாக உள்ளன. இது தொடர்பாக பல சட்டங்கள் இருந்தாலும், அவற்றில் இடம்பெறாத குற்றங்களும் நடக்கின்றன. மற்ற குற்றங்களைப் போன்று இவை ஒரே எல்லைக்குள் நடப்பதில்லை. குற்றம் செய்தவர் ஓரிடத்தில் இருப்பார். பாதிக்கப்பட்டவர் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க கூடும்.

இந்தியாவில் தற்போது 82 கோடிப்பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். விரைவில் இந்த எண்ணிக்கை 1கோடியே 20 லட்சத்தை தாண்டும்.

Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடக்கும் குற்றங்கள் பெருகியுள்ளன. இவை தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக (ரூ. 83 லட்சம் கோடி) புழக்கத்தில் இருக்கும். அந்த வகையில் இப்போது இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment