சூரை திருவிழாவில் கூழ் காய்ச்சி வழிபடுவது ஏன்?

by Lifestyle Editor

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான கூழை காய்ச்சி, கார்த்திகை மாதத்தில் அம்மனுக்கு படைத்து நெல்லை மக்கள் வழிபடுகின்றனர். இந்த கூழில், அரிசி, சீரகம், வெங்காயம் போன்றவை சேர்க்கப்படுகிறது. அம்மன் அதை அன்போடு பருகி, அனைவருக்கும் அருள் புரிவாள் என்பது மக்களின் நம்பிக்கை.

கார்த்திகை மாதம்காற்றில் குளுமை கலந்திருக்கும். இதனால், உடலில் வெப்பம் அதிகரிப்பதால், நோய்கள் தாக்கக் கூடும். எனவே, உடலை குளிர்விக்க கூழ் வார்க்கப்படுகிறது . இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் அப்பகுதியினர் கூழ் காய்ச்சி அம்மனை வழிபட்டனர்.

“திருநெல்வேலியில் அம்மன் கோயில்களில் கூழ் வைத்து பக்தர்களுக்கு வழங்கும் திருவிழா விமர்சையாக நடைபெறும். காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த உச்சினிமாகாளி அம்மன் உள்ளிட்ட அம்மன்களுக்குகூழ் படைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

வேப்பிலை மாலை, எலுமிச்சை கனி மாலை சாற்றி வெப்பநோய் தீர்க்க வழிபடுவதும் காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமாகும். எலுமிச்சைச்சாறு கரும்பு, இளநீர், பால் தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிர செய்வர். அம்மனுக்கு பிடித்த வேப்பிலை மாலைஅணிவித்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது. கூழ் கஞ்சி போன்றவற்றைபடைத்தும், தீபம் காட்டியும், மலர்களால் அலங்காரம் செய்தும் அம்மனை வழிபடுகின்றனர்” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment