தங்கத்தின் விலை (16.12.2023) இன்று சரிவு…

by Lifestyle Editor

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,830ஆகவும், சவரன், ரூ.46,640 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து,, 5,790 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து, ரூபாய் 46 ஆயிரத்து 320 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வாரங்களில் 47 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.79.70 ஆகவும், கிலோவிற்கு ரூ.79,700 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment