ஐஸ்வர்யா ராய் “பச்சன்” வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா?

by Column Editor

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார். அவருக்கு 12 வயதாகிறது.

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இருவரும் விவாகரத்து செய்யபோவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பே கிசுகிசு பரவ தொடங்கிவிட்டது. அதை பற்றி அவர்கள் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஐஸ்வர்யாவை அவரது மாமனார் அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்டார் என்றும் தகவல் பரவியது.

வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா?

இந்நிலையில் தற்போது பச்சன் வீட்டை விட்டு ஐஸ்வர்யா ராய் வெளியேறிவிட்டார் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரிடம் ஐஸ்வர்யா ராய் பேசி பல வருடங்கள் ஆகிறதாம். பச்சன் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கும் ஐஸ்வர்யா, அதிகம் நேரம் தனது அம்மா உடன் தான் செலவிடுகிறாராம்.

மேலும் பச்சன் குடும்பத்தில் இருந்து விலகி, அவர்கள் வீட்டின் ஒரு தனியான பகுதியில் ஐஸ்வர்யா இருந்து வருகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது. மாமியார் – மருமகள் சண்டையில் சிக்கி அபிஷேக் பச்சன் தான் தற்போது பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம்.

இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது ஐஸ்வர்யா ராய் வாய்திறந்தால் தான் உறுதி ஆகும்.

Related Posts

Leave a Comment