4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை..

by Lifestyle Editor

டிசம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையாக இருக்கும் நிலையில் கனியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் டிசம்பர் 26ஆம் தேதி பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதை அடுத்த டிசம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

இதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 20ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறை என்பதால் 23, 24 சனி ஞாயிறு விடுமுறை என்பதால் என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதியும் விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment