தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, 3 நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை – அமைச்சர் அறிவிப்பு.!

by Column Editor

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பிற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடற்கரைக்கு செல்ல மட்டும் தற்போது வரை தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி சனிக்கிழமைகளில் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதனால் தடுப்பூசி செலுத்தும் நாள் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு முதல்வரால் தெரிவிக்கப்படும். அதன் பின்னரே அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். வெள்ளி, சனி கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment