இந்தியர்கள் அதிகம் விரும்பும் ரொமான்ஸ் வகை..

by Lifestyle Editor

திருமண வாழ்க்கையில் தம்பதியர்கள் இடையே அன்பு மற்றும் நெருக்கம் ஆகியவை இருந்தால் தான் வீட்டில் மகிழ்ச்சி குடியிருக்கும். அதே சமயம், தாம்பத்ய வாழ்க்கையில் தினந்தோறும் அல்லது வாடிக்கையாக ஒரே உத்தியை கையாண்டு கொண்டிருந்தால் பாலியல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுவதாக ஒரு சில தம்பதியர்கள் கருதுகின்றனர்.

இதனால், திருமண பந்தத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதே சமயத்தில், பாலியல் ரீதியாக தடைகளை தகர்த்து வாழுவதற்கு சிலர் முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இன்றைய நவீன உலகில் தம்பதியர்கள் என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர் என்பதை இப்போது பார்க்கலாம்.

திருமணம் கடந்த பந்தம் :

இந்திய கலாச்சாரத்தைப் பொருத்தவரையில் திருமண பந்தம் என்பது கட்டுப்பாடுகள் நிறைந்தது. குறிப்பாக ஒருவனுக்கு, ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் ஆழமான நம்பிக்கை கொண்டு, வாழ்வின் இறுதி வரையிலும் அப்படியே வாழ்ந்து முடிப்பது இந்தியர்களின் பொதுவான குணாதிசயமாக இருக்கிறது.

ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் சிலர் இந்தக் கருத்தில் மாறுபடுகின்றனர். திருமண உறவை தக்க வைக்கும் அதே சமயம், மற்ற இணையர்களுடன் அன்பை பரிமாறிக் கொள்ள விரும்புகின்றனர். ஆண்களில் 19 சதவீதம் பேருக்கும், பெண்களில் 18 சதவீதம் பேருக்கும் திருமணம் கடந்த உறவில் விருப்பம் இருக்கிறதாம்.

ஓரிரவு பந்தம் :

பெரிய அளவுக்கு பந்தமோ, நீண்ட நாள் தொடர்போ வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் சிலர் இருக்கின்றனர். மனதிற்கு பிடித்திருந்தால் அன்பை பரிமாறிக் கொள்ளலாம் என்றும், திருமணம் அல்லது நீண்டநாள் பந்தம் தேவையில்லை என்றும் கண்ணோட்டம் நிலவுகிறது. இந்த மனப்பான்மையில் 23 சதவீத ஆண்களும், 20 சதவீத பெண்களும் உள்ளனராம்.ஓரிரவு பந்தம் : பெரிய அளவுக்கு பந்தமோ, நீண்ட நாள் தொடர்போ வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தில் சிலர் இருக்கின்றனர். மனதிற்கு பிடித்திருந்தால் அன்பை பரிமாறிக் கொள்ளலாம் என்றும், திருமணம் அல்லது நீண்டநாள் பந்தம் தேவையில்லை என்றும் கண்ணோட்டம் நிலவுகிறது. இந்த மனப்பான்மையில் 23 சதவீத ஆண்களும், 20 சதவீத பெண்களும் உள்ளனராம்.

ஜொள்ளு வடிப்பது :

ஆம், தம் இணையர்களை கடந்து வேறொரு ஆண் அல்லது பெண்ணுடன், ஜொள்ளு விட்டு பேசுவது சிலருக்கு பிடித்திருக்கிறது. அதே சமயம், எல்லை மீறிச் சென்றுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக உள்ளனர். ஆண்களில் 26 சதவீதம் பேரும், பெண்களில் 22 சதவீதம் பேரும் இந்த எண்ண ஓட்டத்தை கொண்டுள்ளனர்.

வெறும் கற்பனை :

யாருடனும், எந்தவித தவறான பேச்சும் இருக்கக் கூடாது, திருமணம் கடந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று 26 சதவீத ஆண்களும், 22 சதவீத பெண்களும் கருதுகின்றனர். ஆனால், தன் மனம் கவர்ந்த நாயகன் அல்லது நாயகியுடன் இணைந்து வாழுவதைப் போல கற்பனை செய்வது இவர்களுக்கு பிடித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment