நிக்ஷனின் தலைவர் பதவிக்கு எதிராக ஒலித்த மணி!

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.

இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் தலைவராக நிக்ஷன் இருந்து வருகின்றார்.

மேலும் பூர்ணிமா, விஷ்ணு இருவரும் காதல் ஜோடி போன்று பேசி வருகின்றனர். இவர்களின் பேச்சு மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்ஷனின் தலைவர் பதவிக்கு எதிராக மணி அடிப்பதற்கு விஷ்ணு மணி அருகே வந்து அதனை ஒலிக்க வைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment