கேப்டனாக இருந்தாலும் எலிமினேஷன்..பிக் பாஸ்

by Lifestyle Editor

விஜய் வர்மா மற்றும் அனன்யா என இரு வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

கடந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் வெற்றிபெற்ற நிக்சன் இந்த வாரம் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டன் ஆகிவிட்டால் நாமினேஷன் கிடையாது என்று தான் இதுவரை இருந்த விதி.

ஆனால், தற்போது நிக்சனுக்கு புதிதாக ஆப்பு ஒன்றை வைத்துள்ளார் பிக் பாஸ். ஆம், லிவிங் ஏரியாவில் மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

நிக்சன் தலைமையில் யாரவது தனக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்தால் நியாயம் கேட்டு, இந்த மணியை அடிக்கலாம். புகார் ஏற்புடையதாக இருந்து, ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும்.அதுமட்டுமின்றி நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த வாரத்தின் முதல் நாளே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் துவங்கியுள்ளது.

Related Posts

Leave a Comment