நெல்லிக்காய் கொஜ்ஜு செய்வது எப்படி?

by Column Editor

நெல்லிக்காயை பலரும் சாதாரணமாக உப்பு வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் நெல்லிக்காயை வைத்து சூப்பரான உணவு வகையே செய்யலாம். சுவையான நெல்லிக்காய் கொஜ்ஜு செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய்,
நல்லெண்ணெய்,
பெருங்காயம்,
வெந்தயம்,
காய்ந்த மிளகாய்,
புளிக்கரைசல்,
மஞ்சள் தூள்,
கடுகு,
உப்பு தேவையான அளவு

வெறும் கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை வறுக்க வேண்டும்.
பிறகு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மிளகாயையும், பெருங்காயத்தையும் வறுத்து வெந்தயத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதில் நெல்லிக்காய் துண்டுகளை வதக்கவும்.
முழுவது எண்ணெய்யில் வதக்கினால் சுவை கூடும். எண்ணெய் ஆகாதவர்கள் லேசாக வதக்கிய பின் தண்ணீர் சேர்த்து வேக விடலாம்.
பிறகு அதில் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த வெந்தய பொடியை சேர்த்து இறக்கவும்.
மண் சட்டியில் செய்தால் கூடுதல் சுவையை தரும் இந்த நெல்லிக்காய் கொஜ்ஜு.

Related Posts

Leave a Comment