புதினா சட்னி செய்ய ரெசிபி…!

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:

புதினா – 1 கட்டு

வெங்காயம் – 1 (நறுக்கியது)

வர மிளகாய் – 4

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

புளி – 1 சிறிய உருண்டை

தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் புதினாவை நீரில் நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. பின்னர் வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும். பின் அத்துடன், புதினா மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். இறுதியில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து, 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

3. அதன் பின்பு அதனை அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. இப்போது சுவையான புதினா சட்னி ரெடி.

Related Posts

Leave a Comment