இயற்கையாக மிக எளிமையான முறையில் உரம் தயாரிக்க டிப்ஸ்..!

by Lifestyle Editor

இந்த வீட்டு உரம் தயாரிக்க நீங்கள் தினமும் வீட்டில் டீ போட்ட பிறகு வடிகட்டியவுடன் மிஞ்சும் அந்த சக்கை இருக்கும் அல்லவா, அதை அப்படியே தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். சர்க்கரை சேர்க்காமல் எடுத்து வைக்க வேண்டும். அதன் பிறகு அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வெங்காயத் தோலை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பச்சை முட்டை, அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டை தோலுக்கு பதிலாக வாழைப்பழ தோலையும் சேர்த்துக் கொள்ளலாம், அல்லது இரண்டையுமே கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இவை எல்லாம் சேர்த்த இந்த தண்ணீரை அடுப்பை பற்ற வைத்து ஒரு பத்து நிமிடம் கொதிக்க வையுங்கள்.

கொதிக்கும் போது இதில் இருக்கும் சாறு அனைத்தும் இறங்கி தண்ணீர் ஒரு ஆயில் பதத்திற்கு வந்து விடும். அடுப்பை அணைத்து விட்டு இதை அப்படியே வைத்து விடுங்கள். இத்துடன் நீங்கள் முன்னமே எடுத்து வைத்த அந்த டீத்தூள் சக்கை ஊற வைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து ஒரு தட்டு போட்டு இரண்டு மணி நேரம் வரை அப்படியே மூடி வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் ஒரு செடிக்கு ஊற்றி விட்டால் போதும். இது வரை பூக்காத செடிகள் கூட நன்றாக பூத்துக் குலுங்கும். ஒரு வேலை உங்கள் செடிக்கு சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கிறது என்று தோன்றினால் இரண்டு டம்ளர் கூட ஊற்ற வேண்டும் ஒன்றும் தவறில்லை ஆனால் வாரம் ஒரு முறை செய்தால் போதும்.

இப்படி வீட்டிலே நாம் பயன்படுத்திய பிறகு வேண்டாம் என்று தூக்கி வீசும் பொருள்களை வைத்தே, பூக்காத செடிகளை எல்லாம் பூக்க வைக்க முடியும் என்றால் ஒரு செடி என்ன ஒரு தோட்டமே கூட தாராளமாக வளர்க்கலாம்.

Related Posts

Leave a Comment