ஒரு சின்ன சண்டை ரச்சிதா பற்றி பேசிய தினேஷ் உருக்கம்..!

by Lifestyle Editor

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நடிகர் தினேஷ் தான் ரச்சிதாவை பிரிந்தது பற்றி பேசி இருக்கிறார்.

என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. நானும் என் மனைவியும் ஒரு சின்ன சண்டை போட்டு, ஈகோ காரணமாக அது பெரிதாக மாறியது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் பிரிவு ஏற்பட்டது. தற்போது வரை பிரிந்து தான் இருக்கிறோம்.

அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் இருக்கிறேன். அந்த பிரிவுக்கு பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொன்டேன். அவங்களுக்கு (ரச்சிதா) அப்படி தான் இருந்திருக்கும். அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள்.

மீண்டும் சேர பல முறை சேர முயற்சித்து, அதில் frustrate ஆகி நின்றுவிட்டேன். தற்போது வரும் வேலைகளை எடுத்து செய்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ, அப்படி போய் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் இருவருமே ஆரிஸ்ட் என்பதால், எனக்கு அவர் அடையாளம், அவருக்கு நான் அடையாளம் என இருந்தது. ஆனால் அதுவே தற்போது உடைந்து விட்டது.

இந்த விஷயத்தில் ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு தினேஷ் உருக்கமாக பேசி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment